Current Events Organized by Neervely Welfare Association Canada

நீர்வேலி மக்களின் முதலாவது கடற்கரை ஒன்றுகூடல் - NWAC's First Beach Get-Together
நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா எதிர்வரும் July 27 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கடற்கரை கொண்டாட்டத்தை அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒழுங்கு செய்துள்ளார்கள்.

Scarborough ல் இருந்து ஏறத்தாள 50 Km தொலைவில் உள்ள Darlington Beach தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு செற்றுவருவதற்கு பேரூந்து வண்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பேரூந்து வண்டிகள் அதிகாலை 8.00 A.M. Sun City Super Market ல் உள்ள வாகன தரிப்பு இடத்தில் இருந்து புறப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Sun City Super Market: 2761 Markham Rd, Scarborough, ON. M1X 1M4.
Markham Rd & Nashdene
Darlington Beach: 1600 Darlington Park Road, Bowmanville, On. L1E 2T9.

*Parking Available by Sun City Super Market


அங்கு எமது நிர்வாகத்தினரின் திட்டப்படி காலையில் தேநீரும் கடலையும் பாணும் பரிமாறப்படும். பின்னர் BBQ ல் கோழிக்கால்கள் Hotdogs, Burgers, சோளம் போன்றவைகள் grill செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நேரத்தில் அவரவர்கள் தமக்கு விரும்பிய விளையாட்டுக்களை விளையாடவும் முடியும். நீராட விரும்பியவர்கள் நீராடலாம். அத்துடன் ஒரு ஆட்டு இறைச்சி கறியும் மரவள்ளிக்கிழங்கு அவிப்பதற்கும் ரொட்டி சுடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மாலை வேளையில் பழங்கள் பரிமாறப்படும்.

மேர்கொண்டு அங்கத்தவர்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களை நிர்வாகத்தினர் எதிர்பாக்கின்றார்கள். இந்த பயணத்திற்கு செலவுகளின் அடிப்படையில் குடும்பத்திற்கு குறைந்த அளவில் $40.00 நன்கொடையாக பெற யோசித்துள்ளோம்.

இந்த திட்டங்களை நீர்வேலி நிர்வாக சபையினரும் நலன்விரும்பிகளும் ஒரு தொண்டு அடிப்படையிலேயே முயற்சிக்கிறார்கள். இதனால் சங்கத்திடம் எந்த ஒரு காப்புறுதிகளும் இது வரையில் ஒதுக்கப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு இதில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவரும் அவதானமாகவும் நடமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு அமையவும் நடந்து கொள்ள வேண்டுமென மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இந் நாள் அன்று காலநிலைப் பாதுகாப்பிற்காக 200 போர் தங்கக்கூடிய கொட்டகை போடுவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள் கடற்கரை மணலில் உட்கார முடியாதவர்கள் மடக்கு நாற்காலிகளை எடுத்து வரலாம். மேற் கூறப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டியவர்கள் மாத்திரை எடுப்பவர்கள் தமக்கு உகந்த சிறு உணவை எடுத்து வருவது உகந்தது.

உங்கள் ஆதரவிற்கு நன்றி.

ப. ஜெகன்
நிர்வாக சபை உறுப்பினர்கள்.

தொடப்புகளுக்கு:
ஜெகன்: 416-999-8411
சசி: 416-271-6038
சிவா. P: 416-807-7482.

Posted on 23 Jul 2014 by Admin
வாழையடி வாழை 2013 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது
வாழையடி வாழை 2013 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது. பிரதம விருந்தினராக திரு. பொன்னம்பலம் பத்மநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். திரு. சின்னத்தம்பி பிறைசூடி அவர்கள் வாழையடி வாழை 7ம் மலரை வெளியிட்டு வெளியீட்டுரை நடாத்தினார். மாலை 6:00 pm ஆரம்பித்த நிகழ்சி ஆட்டம் பாட்டத்துடன் ஆதிகாலை 1மணி வரை நீடித்தது.

வாழையடி வாழை 2013 நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு:
* கலந்து சிறப்பித்த அன்பர்களுக்கும்
* விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தக வள்ளல்களுக்கும்
* கட்டுரைகள், கவிதைகள், கதைகள் அளித்த அறிஞர்களுக்கும்
* நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்த கலைஞர்களுக்கும்
* எமது விழாவினை விளம்பரப்படுத்திய ஊடகநிறுவனங்களுக்கும்
* இம் மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய RJ Multi Litho & Milan Bindery நிறுவனத்தினருக்கும்
* பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும்

எமது இதயபூர்வமான நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

Posted on 12 Jan 2014 by Admin
Competition Exam 2013 - Video Coverage


Posted on 09 Dec 2013 by Admin
Competition Exam 2013 Completed Successfully
2013 Competition Exam completed successfully . A big thank you to all the students and parents who participated in today’s exam. Students from JK to Grade 9 partook in Tamil, Math and Spelling Bee competitions. Results for today's competitions will be announced on Jan 11th 2014 at our Annual Cultural and Dinner. An Award function will also be held at VAALAIYADI VAALAI 2013 for those that finish 1st, 2nd and 3rd.

Here are some Pictures of Today's Competition:


Click here to see more pictures

Posted on 08 Dec 2013 by Admin
Competition Exam 2013 - Venue and Date Announcement
வணக்கம்.
நீஈவேலி நலன்புரி சங்கம் கனடா வருடம் தோறும் நடாத்தும் மழலைகளுக்கான பரீசை DECEMBER - 08 ம் திகதி (Sunday) 9.00 AM நடைபெற உள்ளது.

Location: Nallur Kandaswamy Temple. 20Nugget Ave Unit 1
Scarborough‎ On‎ M1S 3B1
Canada.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகொள்ளுங்கள்.
ஜெகன் : 416 999 8411.
சசி:416 271-6038.
சிவா:416 807-7482.
president@neervely.ca
secretary@neervely.ca

நன்றி.
வணக்கம்.

Posted on 10 Nov 2013 by Admin
VAALAIYADI VAALAI 2013

வருடாந்த கலை விழாவும் இராப்போசனமும் - 2013
வாழையடி வாழை மலர் - 7 வெளியீடு
Posted on 09 Nov 2013 by Admin
We are now accepting applications for Annual Competition Exam 2013

Neervely Welfare Association - Canada is now accepting applications for Annual Competition Exam 2013. Please click on the link below to submit your application.

Click Here to Submit Your Application

Thank You,

Neervely Welfare Association - Canada

Posted on 02 Oct 2013 by Admin
அரசகேசரி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் 2013

Posted on 09 Sep 2013 by Admin
VAALAIYADI VAALAI 2012 Video Coverage


Posted on 16 Jul 2013 by Admin
Annual Get Together 2013 - Video Clip.


Posted on 15 Jul 2013 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 Next >>