வாழையடி வாழை 2019 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது. S.K Bales அவர்கள் வாழையடி வாழை 12ம் மலரை வெளியிட்டு வெளியீட்டுரை நடாத்தினார். மாலை 5:00 pm ஆரம்பித்த நிகழ்சி ஆட்டம் பாட்டத்துடன் ஆதிகாலை 1மணி வரை நீடித்தது.
வாழையடி வாழை 2019 நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு:
* கலந்து சிறப்பித்த அன்பர்களுக்கும்
* விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தக வள்ளல்களுக்கும்
* கட்டுரைகள், கவிதைகள், கதைகள் அளித்த அறிஞர்களுக்கும்
* நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்த கலைஞர்களுக்கும்
* எமது விழாவினை விளம்பரப்படுத்திய ஊடகநிறுவனங்களுக்கும்
* இம் மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய Printman நிறுவனத்தினருக்கும்
* பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும்
எமது சமூகத்தில் இருந்து எமக்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் வர்த்தக பெருமக்களுக்கு உங்கள் தேவைகளின் முதல் சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எமது இதயபூர்வமான நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.