31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்: சபாரத்தினம் பாலசுந்தரம்பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்குயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் பாலசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.


அன்புத் தந்தையே!!

"அப்பா என்ற வார்த்தையை
உச்சரித்துப் பார்க்கின்றேன்!
உச்சரிக்கும்போதே
என்னுயிர் ஓசையுடன்
கரைகின்றது அப்பா!!

கொஞ்ச தூரம் நடந்துவிட்டு
திரும்பிப் பார்க்கின்றேன்
என் பாதங்களோடு அப்பாவின்
பாதங்கள் வந்திருக்குமோ என்று!

என் அப்பாவின் செருப்பை
நானே வாசலில் போட்டுவிட்டு
வீட்டினுள்ளே தேடுகின்றேன்!
பார்க்குமிடமெல்லாம் எங்கள் பார்வையுள்
தெரிகின்றீர்கள் அப்பா!!!

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம் உணருகின்றோம்
இக் கணமும் உங்கள் நினைவால் துயருகின்றோம்.
உயிருடன் இருக்கிறேன் என்பதற்கு
கண்ணீர் மட்டுமே சாட்சி...

எங்கள் அன்புத்தெய்வத்தின் மரணச்சடங்கில் நேரில் வந்து கலந்து கொண்டவர்களுக்கும், பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தபோது வந்து பார்த்து அனுதாபம் கூறியவர்களுக்கும், வெளிநாட்டிலும், உள் நாட்டிலும் இருந்து தொலைபேசிமூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் எங்கள் இதய பூர்வமான அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 30-08-2017 புதன்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்தியை நிகழ்வுகள் 31-08-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் பிரான்சில் மதியபோசன நிகழ்வு நடைபெறும். இந் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிரான்ஸ் வீட்டு முகவரி:
107 Avenue Henri Barbusse,
La Courneuve, 93120,

France.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் - பிரான்ஸ்
தொலைபேசி: +33954299434
செல்லிடப்பேசி: +33601790549

Posted on 29 Aug 2017 by Admin