மரண அறிவித்தல்: திரு தளையசிங்கம் அகத்தியர்இறப்பு: 2015-04-16
பிறந்த இடம்: நீர்வேலி **** வாழ்ந்த இடம்: சாவகச்சேரி
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் கற்குளி வடக்கு, சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட தளையசிங்கம் அகத்தியர் (குஞ்சன்)(ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் ICSC சார்ஜன் மேஜர்) நேற்று முன்தினம் 16.04.2015 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தளையசிங்கம் சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், மகேஸ்வரியின் (யோகம்) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பூமணி, நவரத்தினராசா, சிவயோகம், பீதாம்பரம், நவரீதம், கபிலராசா, ரத்தினேஸ்வரி மற்றும் பவளகேசரி, செல்வரஞ்சிதம் ஆகி யோரின் அன்புச் சகோதரரும், ஆனந்தராசா, மகேந்திரராசா, சுபத்திரா, சுபேந்திரராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவனேஸ்வரி, அலட்மேரி (ரஜனி), செல்வச்சந்திரன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும், டக்ஷியானி, ஷானுபன், கனன், அஸ்வின், ஆகித்கெவின், கெவினு, சபரினு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.04.2015) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் சாவகச்சேரி கண்ணாடிப் பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - கற்குளி வடக்கு, சாவகச்சேரி. , 077 926 6741

Posted on 18 Apr 2015 by Admin